Hot Posts

6/recent/ticker-posts

வரும் உள்ளாட்சி தேர்தலில்: அதிராம்பட்டினம் நகராட்சி, மற்றும் கடலோர பகுதிகளில் உள்ள ஊர்களில் தேர்தலில் போட்டியிட அதிகமான வார்டுகள் கூட்டணி கட்சிகளிடம் கேட்டு பெறுவோம். தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் அறிக்கை



 அதிராம்பட்டினம:
இந்தியாவின் முஸ்லிம் தேசியவாத அரசியல் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம்லீக்  கேரளாவில் செல்வாக்கு பெற்றுள்ள கட்சியாகும் அதுபோன்று தமிழகத்தில் முஸ்லிம்லீக்கை வலிமை படுத்தி தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதிகளில்  அதிகமானன இடங்களில் வரும் உள்ளாட்சி தேர்தலில்போட்டி இடுவோம் என்று அறிவித்தனர்

இந்தியாவில் முஸ்லிம் மக்களுக்காக 1906-ல் நவாப் சலீம் முல்லா கான் ‘அகில இந்திய முஸ்லிம் லீக்கை ஆரம்பித்தார். அவருக்குப் பின்னர் முகமது அலி ஜின்னா அதனை நடத்தி வந்தார். பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர் காயிதே மில்லத் இதன் தலைவரானார்.

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு போகாமல் இந்தியாவிலேயே தங்கிவிட்டதால் அவர்களுக்காக கட்சி பெயரில் இருந்த ‘அகில’ என்பதை நீக்கிவிட்டு 1949-ம் வருடம் மார்ச் மாதம் இதே நாளில் ‘இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்று மாற்றினார் காயிதே மில்லத். இதன் முதல் மாநாடு சென்னையில் உள்ள ராஜாஜி ஹாலில் நடந்து.

அப்பேர்பட்ட இந்தியயூனியன் முஸ்லிம்லீக் கட்சிக்கு உள்ளாட்சி தேர்தலில் அதிராம்பட்டினம் நகராட்சி மற்றும் கடலோர பகுதிகளில் உள்ள ஊர்களில் உள்ள  வார்டு தேர்தலில்  அதிகமான வார்ட் எண்ணிக்கையை  கூட்டணி  திமு க கட்சியில் கேட்டு பெறுவோம் என்றும் கடந்த உள்ளாட்சி தேர்தலில்  அதிராம்பட்டினம் பகுதி சேர்மன் பதவிக்கு போட்டி இட்டு வெற்றி வாய்ப்பை இழந்த அதிராம்பட்டினம்  நகர இந்தியயூனியன் முஸ்லிம்லீக் செயலாளர் வழக்கறிஞர்  ஏ,முனாப் அவர்களுக்கு சேர்மன் பதவிக்கு கூட்டணி கட்சிகளிடம் மாநில நிர்வாகிகள் மூலம் கேட்டுப் பெறுவோம் என்றும்  தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் அறிவித்தனர்