வார்டு மறுவரையறை செய்த வகையில் சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் 13/1/2022 அன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது சங்கத்திற்க்கு உட்பட்ட பகுதியில் வார்டுகள் குளருபடிகள் செய்து வஞ்சிக்கப்பட்டதை அறிந்து அதிராம்பட்டினம் வெளிநாடுவாழ் சம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லா மக்கள், உள்ளுர் மக்களின் ஆதங்கத்தை சங்கம் உணர்ந்து, அதன் சார்பாக (13/1/2022) வியாழன் கிழமை அன்று சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது இதில், சங்க நிர்வாகிகள், கட்சி மற்றும் இயக்க சகோதார்கள் கலந்துக் கொண்டனர்
பின்பு அதிராம்பட்டிணம் நகராட்சி நமது பகுதிக்கு வார்டுகள் வரையரை யில் அதிராம்பட்டினம் பகுதிக்கு இழைத்த அநீதியை எதிர்த்து, அதிராம்பட்டினத்தில் நகராட்சியை நோக்கி வரும் 19/1/2022 காலை முற்றுகை போராட்டம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.
தற்போதைய 27 வார்ட் வரையறைகள் படி ஆளும் திமுக கட்சியில் உத்தேச வேட்பாளர்கள் தயார் நிலையில்
அதிரையை நான்கு மண்டலமாக பிரித்து வேலைகள் செய்ய ஆரம்பித்து உள்ளனர்
27, வார்டில் கரையூர் தெரு வார்ட் 2 போட்டி இல்லை
மீதி 25 ல் திமுக போட்டி யிட உள்ள வார்டுகள் 20 என்றும் கூட்டணி கட்சிகளான, காங்கிரஸ், முஸ்லிம்லீக், கம்யூனிஸ்ட், மமக கட்சிகளுக்கு எத்தனை வார்டுகள் என்பது தெரியாமல் கூட்டணிக்குல் குழப்பம் ஏற்படாமல் இருக்க காய் நகர்த திமுக கட்சி நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ய தஞ்சாவூர் விரைந்து இருப்பதாக நம்பிக்கை வட்டார செய்திகள் மூலம் கசிந்துள்ளது
Social Plugin