இந்திய இஸ்லாமியர்களின் தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் பயணிப்பவர்கள் வெற்றிபெற்றால் வாலை சுழற்றுவதுமில்லை,தோல்வியை கண்டு துவண்டு போவதுமில்லை. எல்லாம் இறைவன் நாட்டம் என தொடர்ந்து சமூக பணிகளாற்றி வருபவர்கள்.
நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு பல்வேறு இயக்கங்களிலிருந்து விலகி இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் இணைந்த வண்ணம் உள்ளனர். நாமாக யாரையும் அழைக்கவில்லை, அவர்களாகவே தீர்க்கமான முடிவெடுத்து தாய்ச்சபையில் இணைகின்றனர், எல்லாம் புகழும் இறைவனுக்கே!
திண்டுக்கலில் சமூக பணிகளாற்றி வந்த முஹம்மது இல்யாஸ் (தற்போது மாநகராட்சி உறுப்பினர்) உள்ளிட்ட பல நூறு இளைஞர்கள்,காங்கிரஸ் கட்சியிலிருந்து சென்னை மாநகராட்சி மாமன்ற முன்னாள் உறுப்பினர் அப்துல் காலிக், அகில இந்திய மஜ்லிசே இஹ்திஹாதுல் முஸ்லிமீன் (AIMIM)கட்சியிலிருந்து மதுரை அவ்தா காதர், சென்னை இனாயத்துல்லாஹ் செரீப் தலைமையில் 20 மாவட்ட நிர்வாகிகள், பல்லாவரம் சலீமுத்தீன் தலைமையில் ம.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் சில மாதங்களுக்கு முன்பு முஸ்லிம் லீகில் இணைந்தனர்.
இன்று (27-03-2022) சேலத்தில் பல்லாண்டுகளாக த.மு.மு.க.வில் பயணித்து வந்தவர்கள், பண பலத்தை முறியடித்து உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக களம் கண்டு சேலம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினராக மாபெரும் வெற்றி பெற்ற S A சையத் மூஸா, இவர் வெற்றிக்கு துணை நின்ற
வழக்கறிஞர் இம்தியாஸ்கான் (மாநில செயலாளர்,த.மு.மு.க)
சுல்தான் அலாவுதீன் (த.மு.மு.க.மாவட்ட செயலாளர்)
வழக்கறிஞர் ஷாகுல் ஹமீது உள்ளிட்ட பல நூறு இளைஞர்கள் 'இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் பயணித்தால் மட்டுமே முஸ்லிம்களின் நலன் பாதுகாக்கப்படும்' என முடிவெடுத்து தாய்ச்சபை இணைந்துள்ளனர். அனைவர்களுக்கும் இதயம் நிறைந்த வாழ்த்துக்களை கூறி அகமகிழ்ந்து வரவேற்கின்றோம்.
தேசிய ஒருமைப்பாடு தழைத்திட, சமூக நல்லிணக்கம் பேணிட, சிறுபான்மையினரின் கலாச்சார தனித்தன்மை பாதுகாத்திட சூளுரைப்போம்!
நாரே தக்பீர்! அல்லாஹ் அக்பர்!
முஸ்லிம் லீக்! ஜிந்தாபாத்!
Social Plugin