வக்ஃப் வாரியத்திற்கு சொந்தமான காலி இடங்களில் மருத்துவமனை, பள்ளிகள், கல்லூரிகள் ஏற்படுத்திட நடைமுறைகளை எளிதாக்கி சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்.,
சிறுபான்மையின மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகைகளை முறையாக தகுதியுடைய மாணவர்களுக்கு முழுமையாக கிடைக்கப் பெறுவதை கண்காணிக்க கண்காணிப்புக் குழு ஏற்படுத்த வேண்டும்.,
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய சிறுபான்மை நலத் துறை அமைச்சர் முக்தர் அபாஸ் நக்வி அவர்களிடம் நவாஸ்கனி எம்பி கோரிக்கை.
--
இது குறித்து நவாஸ்கனி எம்பி ஒன்றிய சிறுபான்மை நலத் துறை அமைச்சருக்கு வழங்கிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாவது,
தமிழ்நாட்டில் வக்ஃப் வாரியத்திற்கு சொந்தமான பல்வேறு இடங்கள் பயன்படுத்தப்படாமலும், ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டும் பயனற்று இருக்கிறது.
தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தில் உறுப்பினராக நேரடியாக பல்வேறு இடங்களை ஆய்வும் செய்து இருக்கிறோம்.
ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்ட சொத்துக்களை மீட்பது மட்டுமல்லாது, இருக்கும் சொத்துக்களை ஆக்கிரமிக்கப்படாமல் தடுப்பதற்கும், அதனை மக்களுக்கு பயன்படும் வண்ணம் பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
வக்ஃப் வாரியத்திற்கு சொந்தமான இடங்களில் மக்கள் பயன்பெறும் வண்ணம் மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள் ஏற்படுத்திட நடைமுறைகளை எளிதாக்கி சிறப்பு நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
சிறுபான்மையின மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை முறையாக தகுதியுடைய மாணவர்களுக்கு முழுமையாக வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இன்னும் கிராமப்புற மாணவர்களுக்கு சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் கல்வி உதவி தொகை குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால் அதனை அவர்கள் முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
கிராமப்புற மாணவர்கள் தான் கல்வி உதவித்தொகை அதிகம் தேவையுடைய மாணவர்களாக இருக்கிறார்கள்.
அவர்களுக்கு அதனை முழுமையாக கொண்டு சேர்ப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
கல்வி நிறுவனங்களிலும் அரசால் வழங்கப்படும் சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை குறித்த போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது என எண்ணுகிறேன்.
எனவே சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை குறித்த போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், முழுமையாக தகுதியுடைய மாணவர்கள் பயனடைவதை உறுதி செய்யவும், மாநில அளவிலான கண்காணிப்பு குழுவை ஏற்படுத்தி சிறுபான்மை நலத்துறை அமைச்சகத்தின் நேரடி கண்காணிப்பில் கல்வி உதவித் தொகை முழுமையாக கிடைக்கப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.
Social Plugin