முத்துப்பேட்டை காரைக்குடி அகல ரயில்பாதை அமைக்கும் பணிகள் முடிந்து தினசரி டெமூ ரயில் காரைக்குடி முதல் முத்துப்பேட்டை வழியாக திருவாரூர் வரை இயக்கப்பட்டு வருகின்றது
4/6/2022 முதல் எர்ணாகுளம் முதல் வேலாங்கண்ணி வரை வாரம் ஒருமுறை சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகின்றது இந்த சிறப்பு ரயில் சுற்றுலா பயணிகள், மற்றும் கேரளாவிற்கு மருத்துவத்திற்கு செல்லும் மக்களுக்கு உதவியாக உள்ளது
முத்துப்பேட்டையில் இறைநேச செல்வர் மஹான் சேக்தாவுத் வலியுல்லாஹ் அவர்களது தர்ஹா இருப்பதால் ஆன்மீக பயணிகள் அதிகமான கேரளா மக்கள் முத்துப்பேட்டை பகுதிக்கு அதிகமாக வந்து செல்கின்றனர்
முத்துப்பேட்டை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் ஆன்மிக பயணிகள் அதிகமாக வந்து செல்வதால் முத்துப்பேட்டை ரயில் நிலையத்தில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் நின்று செல்லவேண்டும் என்று திருச்சி ரயில் கோட்ட மேலாளர் அவர்களுக்கு இந்தியயூனியன் முஸ்லிம்லீக் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ஏ எம், அப்துல்காதர் கோரிக்கை வைத்துல்லனர்
Social Plugin