Hot Posts

6/recent/ticker-posts

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து 16 ஆண்டுகளுக்கு பின்பு அதிகமானவர்கள் ஹஜ் பயனம். மவ்லவி முஹம்மது நெய்னா ஆலிம்பிராத்தனை செய்து வழியனுப்பி வைத்தனர்.




அதிராம்பட்டினத்தில் இருந்த வருடா வருடம் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் நபர்கள் அதிகம் அது போன்று கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரொன நோய் தொற்று காரணமாக ஹஜ் பயணிகள் அனுமதிக்கப்பட வில்லை 

கொரோனா தொற்று படிபடியாக குறைய தொடங்கியதும் ஹஜ் பயணம் மேற்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் அதிராம்பட்டினத்தில் இருந்து அதிகமான ஹாஜிகள் ரயில் மூலம் கொச்சின் கேராளா ஏர்போட் மூலம் ஹாஜிகள் பயணம் மேற்கொள்கின்றன ர் இவர்களை வழி அனுப்புவதற்கு அவர் அவர்களது குடும்பத்தினர் அதிகமானோர்  எர்ணாகுளம் வேளாங்கண்ணி ரயில் மூலம் கொச்சின் சென்றனர்

இவர்களின் பயணம் சிறப்பாக அமைய முன்னோர்கள் கட்டிக்கொடுத்த படி சுன்னத்தான அமலாக கருதப் படும்  பாங்கு சொல்லி ஹாஜிகள் அனைவரும் வழி அனுப்பி வைக்கப்பட்டனர் இந்த நிகழ்ச்சியில் ரயில் உபயோகிப்பாளர் சங்கம் அப்துர் ரஜாக் மற்றும் மவ்லவி முஹம்மது நெய்னா ஆலிம் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்

பொதுமக்கள் கோரிக்கை:

எர்ணாகுளம் வேளாங்கண்ணி வாரம் ஒரும்முறை இயக்கும்  இந்த ஸ்பெஷல் ரயில்  வாரம் இருமுறையாகவும் காரைக்குடி முதல் சென்னைக்கும் உடனடியாக எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும் என்று பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது