புகாரி என்பது முகம்மது நபியின் பொன்மொழிகள் அடங்கிய தொகுப்பு நூலாகும். நபிகளாரின் பொன்மொழித் தொகுப்புநூல்களில் தலையாயதாகக் கொள்ளப்படுவது புகாரி ஹதீஸ் 40 நாட்களுக்கு அதிராம்பட்டினத்தில் ஹதீஸ் ஓதப்பட்டு தமிழ் விளக்கம் செய்யப்பட்டு வருகின்றது
இன்று 24/7/22 தமிழ் விளக்க உரையில் ரஹ்மானிய அரபிக்கல்லூரி முனால் மாணவர் அதிராம்பட்டினம் தக்வா பள்ளி தலைமை இமாம் மொளலவி தமிம் ஆலிம் பேசியதாவது:-
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் இறந்தவர்களைப் புதைக்காமல் விட்டுவிடுவீர்களோ என்ற அச்சம் எனக்கில்லையாயின் , மண்ணறையின் வேதனையை உங்களுக்குக் கேட்கச் செய்யுமாறு நான் அல்லாஹ் விடம் பிரார்த்தனை செய்திருப்பேன்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ரசூல் ஸல் அவர்கள் இரண்டு கபுர் களுக்கு இடையில் நடந்து கொண்டு இருக்கும் போது கபுர்களின் வேதனை பற்றி சொன்னார்கள் அவர்கள் யார் என்று கேட்டால் அவர்கள் சிறுநீர் கழித்து சுத்தம் செய்யாதவர்களும் ,கோல் சொல்லுபவர்கள் கப்ரின் வேதனை தான் அதிக வேதனை என்று சொன்னார்கள்
அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் :
ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் உரையாற்றும் போது, மண்ணறையில் மனிதன் அனுபவிக்கும் சோதனையைப் பற்றிக் கூறினார்கள். அவ்வாறு கூறிக்கொண்டிருக்கும் போது முஸ்லிம்கள் (அச்சத்தால்) கதறிவிட்டார்கள். சம்பாத்தியம் எல்லாம் கப்ர் வரைதான் எனகூறினார் உஸ்மான் (ரலி) அவர்கள் மண்ணறைக்கு அருகில் நின்றால் தாடி நனைகின்ற அளவு அழுவார்கள்.” சொர்க்கம், நரகத்தைப் பற்றி கூறப்படும் போது தாங்கள் அழுவதில்லை. ஆனால் மண்ணறையைப் பார்த்தால் அழுகிறீர்களே ஏன்?” என்று அவர்களிடத்தில் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் கூறினார்கள்.
”மண்ணறைதான் மறுமையின் நிலைகளில் முதல் நிலையாகும். இதில் ஒருவன் வென்று விட்டால் இதற்குப் பின் உள்ள நிலை இதை விட இலகுவானதாக இருக்கும். இதில் ஒருவன் வெற்றி பெறா விட்டால் இதற்குப் பின் உள்ள நிலைமை இதை விடக் கடுமையானதாக இருக்கும். நான் கண்ட காட்சிகளிலேயே மண்ணறை தான் மிகக் கோரமான இருந்தது ”
என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். ” எனவே தான் மண்ணறையைப் பார்த்தால் அழுகிறேன்” என்று உஸ்மான் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
ஓர் அடியான் தாய் தந்தை கப்ரை தரிசனம் செய்ய வேண்டும் கப்ரில் அடக்கம் செய்யப்பட்டு அவனுடைய தாய் தந்தை அடக்கம் செய்யப்பட்டு திரும்பிச் செல்லும்போது, அவர்களின் செருப்பின் ஓசையைச் செவியேற்பான். அப்போது இரண்டு வானவர்கள் கப்ர் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து, ‘இந்த மனிதரைப் பற்றி என்ன கருதிக் கொண்டிருந்தாய்?’ என்று முஹம்மத் நபி (ஸல்) குறித்துக் கேட்பர். இவர்கள் இறைநம்பிக்கையாளனாக இருந்தால் ‘இவர் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்’ எனக் கூறுறினார்
Social Plugin