Hot Posts

6/recent/ticker-posts

கத்தார் சிறையில் உள்ள திவேஷ் லால் விடுதலைக்கு ரூபாய் 46 இலட்சம் இரத்த பணத்தை வழங்குகிறது முஸ்லிம் லீக்.


நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் பின்னோக்கி நகர்ந்து ஏற்பட்ட விபத்தில் எகிப்தைச் சார்ந்த ஒருவர் பலியாக, ஓட்டுநரான கேரள மாநிலம் அங்காடிபுரம் வலம்பூரைச் சேர்ந்த தினேஷ் லால் -ஐ சிறையில் அடைத்தது கத்தார் அரசு.

இஸ்லாமிய சட்டப்படி பலியானவர் குடும்பம் மன்னிப்பு வழங்கினால், விபத்திற்கு காரணமானர் விடுதலை செய்யப்படலாம். 

அதன்படி பலியான எகிப்து நபரின் குடும்பத்தினர் தியா பணம்(Blood Money)  பெற்றுக்கொண்டு மன்னிப்பு வழங்க தயாரான நிலையில், தினேஷ் லாலின் குடும்பத்தினர் முஸ்லிம் லீகின் தலைமை பீடமான பானக்காடு தங்ஙள் குடும்பத்தினரை சந்தித்து உதவி கோரினர்.

கேரள மாநில யூத் லீக் தலைவர் பானக்காடு செய்யது முனவ்வர் அலி ஷிகாப் தங்ஙள் அதற்கு பொறுப்பேற்று ரூபாய் 46 இலட்சம் திரட்டப்பட்டு தினேஷ் லால் குடும்பத்தினர் மூலம், பலியான எகிப்தியர் குடும்பத்திற்கு வழங்கப்பட இருக்கிறது.

அதனைத் தொடர்ந்து தினேஷ் லால் கத்தார் அரசால் விடுதலை செய்யப்படுவார்.

சில வருடங்களுக்கு முன்பு குவைத் சிறையில் இருந்த தஞ்சாவூரைச் சேர்ந்த அர்ஜுனன் ஆதிமுத்துவிற்கு  ரூபாய். 30 இலட்சம் திரட்டி கொடுத்து உதவியது கேரள மாநில முஸ்லிம் லீக் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவத்தை தமிழில் வெளியான Blood Money திரைப்படத்தில் காட்சி படுத்தி இருந்தார் Nabil Ahamed அவர்கள்.

இது தான் உண்மையான கேரள ஸ்டோரி.

-:புளியங்குடி அமீன்.